Home » »


நான் கல்யாணம் பண்ணினா என்ன? பண்ணாட்டி என்ன? – ராதிகாவின் காட்டம்

டோனி பட ஹீரோயினான ராதிகா ஆப்தே தற்போது வெற்றிச்செல்வன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றி செல்வன் படம் தொடக்கத்தில் இருந்தபோது வந்த படவாய்ப்புகளை தவிர்த்து வந்தார் ராதிகா. அதற்கு காரணமாக கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றும் கூறி வந்தார்.
தமிழ் சினிமாவில் அழகே இல்லாத ஒரு பெண்ணை அழைத்து வந்து அழகி என்று வாய் கிழிய பேட்டி கொடுப்பார்களே தவிர, கல்யாணம் என்று மட்டும் வந்துவிட்டால் மூட்டை கட்ட வைத்துவிடுவார்கள். போகப் போகத்தான் அம்மணி இதை புரிந்துகொண்டார் போலிருக்கிறது!
ஒருபக்கம் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிவதை கண்ட அவரால் அவற்றில் நடிக்காமல் தவிர்க்கவும் முடியவில்லை. இப்போது நான் தொடர்ந்து நடிப்பேன் என ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார்.
உங்களுக்கு கல்யாணம் என்று சொன்னீர்களே.. என்று கேட்டால், ”சொன்னேன்தான்… அதனாலென்ன…?” என்று திருப்பிக் கேட்கிறாராம்.
‘சரி .. படம் முடியும் வரை உங்களுக்கு கல்யாணம் ஆகாதா?’ என்று கேட்டால்… ‘அது உங்களுக்கு தேவையில்லாதது.. நான் கல்யாணம் பண்ணிக்கொண்டும் நடிப்பேன். உங்களுக்கு என் கால்ஷீட் தேவையெனில் தருகிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கொள்வதில் உங்களுக்கு என்ன சிரமம்?’ என்று கேட்டு அதிர வைக்கிறாராம்.
இதையே அவரை அணுகிய ஒரு தயாரிப்பாளரிடம் கேள்வியாக வைத்தோம்..
அதற்கு அவர் சொன்ன பதில், “அட போங்க சார்.. இந்த பொண்ணு கல்யாணத்துக்கு முன் ஒரு உடல்வாகுல இருக்கும். அப்புறம் ஒரு உடல்வாகு வரும்.. அல்லது குழந்தை பெத்துக்கப் போறேன் உங்களுக்கென்ன.. ஒரு பத்து மாசம் காத்திருங்கள்னு சொன்னா நாங்க எங்க போய் வட்டி கட்ட? இதெல்லாம் பெரிய சிக்கல் சாமி ஆளைவிடுங்க,” என்றார்.
தயாரிப்பாளர் கஷ்டம் ராதிகாக்களுக்கு சீக்கிரமே புரிந்துவிடாதா என்ன?

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Blogger இயக்குவது.

More Latest News

Ads 468x60px

Social Icons

Followers

Latest News

Featured Posts