சொந்த முயற்சியில்தான் ஹீரோவானாராம் விஜய்! – அப்பா எஸ்.ஏ.சியின் அண்டப்புளுகு?
Saturday, November 27, 2012
பிரபலம்னாலே என்ன சொன்னாலும் அது அம்பலத்தான் புழுகு மாதிரி தான் போலருக்கு. நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியின் சமீபத்திய பேச்சு அப்படித்தான் இருந்தது.
தன் மகன் விஜய்யை எப்படியாவது தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆக்கி விட வேண்டும் என்று படங்களுக்கு மேல் படங்களை சொந்தமான தயாரித்த எஸ்.ஏ.சி இப்போது விஜய் முன்னணி ஹீரோவாக ஆனவுடன் விஜய் அவரோட சொந்த முயற்சியில் தான் ஹீரோவானார் என்று அண்டப்புளுகு புளுகியிருக்கிறார் எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்ஷனில் விஜயகாந்த் நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவி சினேகா பிரிட்டோ டைரக்ஷனில் மீண்டும் அதே பெயரில் ஒரு படம் ரிலீஸாக உள்ளது.
அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். அந்தப் படத்தின் ஆடியோ பங்ஷன் சமீபத்தில் மதுரை அமெரிக்கன் காலேஜில் நடந்தது.
இந்த விழாவில் அந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் மதுரையை சேர்ந்த தமிழ்க்குமரன், ஹீரோயின் பிந்து மாதவி, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, விமலாராணி, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ராம்பிரசாத், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் சீப் ஹெஸ்ட்டாக எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அங்கே அவர் பேசும்போது…
“என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க விரும்பினேன். ஆனால் அவர் நடிகராக நினைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்தேன்.
அதன்பிறகு நடிப்புத்துறையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான்.
அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.
‘நாளைய தீர்ப்பு’ படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் ஹீரோ என்று கூறினார்கள். ஆனால் இப்போது என்னை நடிகர் விஜய்யின் அப்பா என்று கூறுகிறார்கள். அதுபோன்ற ஒரு பெருமையை கடின உழைப்பின் மூலம் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
திறமைக்கு தமிழக மக்கள் நிச்சயம் ஊக்கம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் பேத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அது கண்டிப்பாக வெற்றி பெறும்” இவ்வாறு அவர் கூறினார்.
மகனுக்காக தொடர்ந்து ஐந்து படங்களை எடுத்த எஸ்.ஏ.சி, விஜய் அவர் சொந்த உழைப்பில் தான் ஹீரோவாக ஆனார் என்று சொல்கிறார். ஆனால் அவரைப் போல சொந்தப் படம் எடுக்காமல் மற்றவர்களின் படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்து இன்று விஜய்க்கு போட்டியாக வந்திருக்கும் அஜித்தின் உழைப்பை எப்படி பாராட்டுவார் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சி.சார் புளுகுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா… சார்?
0 comments:
கருத்துரையிடுக