‘நானா, முழு நிர்வாணமாகவா… யாரந்த நான்சென்ஸ்?’ வெறியா தேடும் ஆண்ட்ரியா
Saturday, November 27, 2012
பேசாமல் இவரது பெயரை காண்ட்ரவர்சியா என்று மாற்றிவிடலாமா என்று யோசிக்கவைக்கிற அளவுக்கு அவ்வளவு காண்ட்ரவர்சிகள் ஒட்டி உறவாடி அலைகின்றன ஆண்ட்ரியாவைச் சுற்றி.
‘விஸ்வரூபம்’ அமெரிக்க ஷெட்யூல்களில் கமலுடன் கதகதக்கப்பட்டு, அப்புறம் ‘கொலவெறி’ அனிருத்தின் உதட்டில் சிக்கி சின்னாபின்னமாகி, சமீப சிலகாலமாய் ஓய்வெடுத்து வந்தவரை ஒரு நிர்வாண நடிப்பு கிசுகிசு ஒன்று சில தினங்களாய், வெற்றுடம்புடன் நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது.
சும்மாவே படவாய்ப்புகள் கம்மியாக வந்த நிலையில் ஜீவா-த்ரிஷா ஜோடி கட்டும் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் இரண்டாவது நாயகியாக சமீபத்தில்தான் ஒரு எட்டுபோய் நடித்துவிட்டு வந்தார் ஆண்ட்ரியா.
அது சம்பந்தப்பட்ட யூனிட்டிலிருந்து கிடைத்த ஊர்ஜிதமான தகவலா, அல்லது தகவலைக் கிளப்பியவரின் சொந்த ஸ்கிரீன் – ப்ளேயா என்பது தெரியவில்லை.
அந்தப்படத்தில் கடைசியாக நடித்த காட்சியில், யூனிட்டிலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு இயக்குனர், கேமராமேன் மற்றும் ஆண்ட்ரியா மட்டும் இருந்த ஒரு முழு நீள நிர்வாணக் காட்சியை படம் பிடித்தார்களாம். வழக்கம்போலவே ஓவியக்கல்லூரி மாணவருக்கு கலை உள்ளத்துடன் ஆண்ட்ரியா நிர்வாண போஸ் கொடுக்கும் காட்சியாம் அது.
மேற்படி தகவல் உண்மையா என்று ஆண்ட்ரியாவிடன் விசாரித்தால், செய்திகளைக்கிளப்பி வருபவர்களை பன்மையில் பல்வேறு அர்த்தங்கள் வரும்படி திட்டுகிறார்.
0 comments:
கருத்துரையிடுக