அடேங்கப்பா? : இன்னும் இரண்டு மாதங்களில் 20 படங்கள் ரிலீஸாம்!
November 20, 2012 at 9:36 PM
தீபாவளி பண்டிகைக்கு நான்கு படங்களே ரிலீசான நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பல புதியபடங்கள் ரிலீசுக்கு ரெடியாக நிற்கின்றன. வரும் ஜனவரி 14 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 50 நாட்களில் சுமார் 20 படங்கள் தொடர்ந்து ரிலீஸாக இருக்கின்றது. இதில் சிறிய பட்ஜெட் படங்களும் உண்டாம்.
இவற்றில் ‘கள்ளத்துப்பாக்கி’ படம் வருகிற 23-ந்தேதி வருகிறது. சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படம் வருகிற 30-ந்தேதி ரிலீசாகிறது. இதில் விஷ்ணு, சுனைனா ஜோடியாக நடித்துள்ளனர். அதேபோல ‘நடுவுல கெஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘கொஞ்சம் காப்பி கொஞ்சம் காதல்’ ஆகிய படங்களும் ரிலீசாகின்றன.
அடுத்த டிசம்பர் மாதம் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படம் ரிலீசாகிறது. இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
கவுதம்மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’, பாலா இயக்கிய ‘பரதேசி’, திரு இயக்கத்தில் விஷால், திரிஷா ஜோடியாக நடித்த ‘சமர்’ படங்களும் அடுத்த மாதம் வருகின்றன.
கமல் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படமும் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
பொங்கல் தினத்தன்று கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’, ஆர்யாவின் ‘சேட்டை’, விஷாலின் ‘மதகஜராஜா’ போன்ற படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக வரும் பொங்கல் வரை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு கொண்ட்டாட்டம் தான்.
0 comments:
கருத்துரையிடுக