ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அடிக்கடி காணாமல் போன விக்ரம், எமி ஜாக்ஸன்.. உச்சகட்ட டென்சனில் ஷங்கர்!
, Nov 20, 2012 at 8:27 PM
சீனாவில் 40 நாளில் 40 கோடி செலவழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்ட ஷங்கரின் ‘ஐ’ டீம் 39 கோடியே 99 ஆயிரத்து 999 ரூபாய் செலவழித்து ஒரே ஒரு 1 ரூபாய் நாணயத்தை மிச்சப்படுத்தியபடி ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறது.
படத்துக்கான இன்னொரு கதாநாயகி, இன்னும் கூட முடிவாகாத நிலையில், வேறு வழியின்றி எமி ஜாக்சனுடன் மட்டுமே சுற்றித் திரிய வேண்டிய நிர்கதிக்கு ஆளாகிவிட்டாராம் விக்ரம்.
ஆனால், விக்ரமின் இந்த மன நிலைக்கு முற்றிலும் ‘தலைகீழாக’ எமி விக்ரமுடன் தனியாக சுற்றுவதை ரொம்பவே எஞ்சாய் பண்ணினாராம்.
இதை நேற்று கூட தனது ட்விட்டரில் கொட்டிய எமி, ‘இப்போது ஏங் லீ யின் ‘க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்’ படப்பிடிப்பு நடந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நானும் விக்ரமும் மட்டும் இருக்கிறோம். வேற ஏதாவது டீடெய்ல்ஸ் வேண்டுமா?’ என்று கேட்கிறார்.
இப்படியே படப்பிடிப்பு நடந்த பல சமயங்களிலும், இந்த ஜோடி அடிக்கடி ‘தன்னந்தனி காட்டுக்குள்ளே’ காணாமல் போய் கண்ணாமூச்சி ஆடியதை ஒட்டி ‘ஐ’ கள் இரண்டும் சிவக்க கோபமாக இருக்கிறாராம் ஷங்கர்!
0 comments:
கருத்துரையிடுக