மூன்று நாள் வசூல் 10 கோடி ரூபாய் : ரெய்டு பயத்தில் ‘துப்பாக்கி’ படத்தயாரிப்பாளர்!
Saturday, November 17, 2012
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான ‘துப்பாக்கி’ படம் ரிலீஸான மூன்றே நாளில் 10.01 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் தகவல் வெளியே லீக்காகியிருப்பதால் எங்கே அலுவலகத்துக்குள் வருமானவரித்துறையினர் ரெய்டு வந்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்கிறாராம் ‘துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் தீபாவளிக்கு ரிலீஸான படம் தான் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தில் விஜய் ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இளையதளபதி விஜய், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த முதல் படம் என்பதால் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது.
கடந்த 13-ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸான ‘துப்பாக்கி’ படம் இப்போது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறதாம். அது உண்மை தான் என்று சொல்வதைப் போல, படம் ரிலீஸான முதல் முதல் முதல் மூன்று நாட்களிலேயே தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் சுமார் 10.01 கோடி ரூபாய் பணத்தை ரசிகர்களிடமிருந்து கத்தையாக வசூல் செய்திருக்கிறது.
விஜய் நடித்த எந்தப் படமும் முதல் மூன்று நாட்களில் இவ்வளவி பெரிய தொகையை வசூல் செய்தது கிடையாதாம். மூன்று நாள் வசூலே 10 கோடியை தாண்டுகிறது என்றால் இன்னும் 25வது நாள், 50வது நாள் வசூலெல்லாம் எவ்வளவு இருக்கும். அப்படி வசூலாகும் தொகைக்கு சம்பந்தப்பட்டவர்கள் சரியான முறையில் வருமான வரி செலுத்துகிறார்களா..? என்று இன்கம்டெக்ஸ்காரர்கள் முழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.
ஏற்கனவே மூன்று நாட்களின் வசூல் விபரங்கள் லீக்காகி விட்டதால் எங்கே இன்கம்டெக்ஸ்காரர்கள் அலுவலகத்துக்குள் வந்து ‘துப்பாக்கி’ படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை தெரிந்து கொண்டு விடுவார்களோ? என்ற பயத்தில் இந்தப் இன்கம்டெக்ஸ் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? என்று தயாரிப்பாளர் தாணு, விஜய் அப்பா எஸ்.ஏ.சியுடன் டிஸ்கஷன் நடத்தி வருகிறாராம்.
0 comments:
கருத்துரையிடுக