டெய்லி ஒரு ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் : கார்த்திக்கு கடுப்பைப் கிளப்பும் வெங்கட்பிரபு!
Saturday, November 27, 2012
‘பிரியாணி’ படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு கேரக்டருக்கு ஒரு புது நடிகர் என தினமும் ஒரு கேரக்டருக்காக ஆர்ட்டிஸ்ட்டுகளை கமிட் பண்ணி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு.
ஏற்கனவே கார்த்தி, பிரேம்ஜி,சாம் ஆண்டர்சன் என்று இப்போதே டஜன் கணக்கில் ஆர்ட்டிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இப்போது புதிதாக பழைய நடிகர் ராம்கியும் ‘பிரியாணி’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கப் போகிறாராம்.
விஜயகாந்த் நடித்த ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடிகை நிரோஷா பின்னால் பாட்டு பாடியபடியே போனவர் அப்படியே நிரோஷாவை ரகசியமாக மேரேஜ் பண்ணிக்கொண்டு சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.
நிரோஷா சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ உட்பட சில படங்களிலும், ‘சின்னப்பாப்பா பெரியபாப்பா’ உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தது வருகிறார். ஆனால் ராம்கி எந்தப் படத்திலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
ஆனால் இப்போது என்ன நினைத்தாரோ? தெரியவில்லை, மீண்டும் வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.
ஷுட்டிங் ஸ்பாட்டில் பேர்த்-டே பங்ஷன்களை கொண்டாடியே ஸ்டூடியோ க்ரீனின் பட்ஜெட்டை எகிற விட்டிருக்கும் வெங்கட்பிரபுவின் இந்த நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனால் ஹீரோ கார்த்தி செம கடுப்பில் இருக்கிறாராம்.
0 comments:
கருத்துரையிடுக