Home » »


‘ஜெமினி லோகோ’வில் ஜட்டியோடு நிற்கும் தங்கர் பச்சானும் சிம்புவும்!

மிழ் சினிமாவுக்கு ரிலீஸ் வகையிலும், கலெக்‌ஷன் வகையிலும் கடந்து போன தீபாவளி கசப்பான தீபாவளி என்றுதான் சொல்லவேண்டும்.
சென்சார் ஆன நிலையிலேயே பிரபல நடிகர்களின் 25 க்கும் மேற்பட்ட படங்கள் தயாராக இருந்தும் ஏனோ விஜயின் ‘துப்பாக்கி’ சிம்புவின் பழைய ‘போடா போடி’ தவிர்த்து வேறு முக்கிய படங்கள் ரிலீஸாகவில்லை. கடைசி சில தினங்களில் ரேசில் கலந்துகொண்ட தங்கர் பச்சான் மற்றும் காசிக்குப்பன் ஆகியோருக்கு இது கண்ணீர் தீபாவளிதான் என்று சொல்லவேண்டும்.
சுமார் 45 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, தெலுங்கு டப்பிங் 15 கோடி உட்பட 65 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்ட ‘துப்பாக்கி’ யின் வசூல் முதல் இரண்டு நாட்கள் மட்டும் தமிழ் சினிமா காணாத அளவில் அபாரமாக இருந்ததாம்.
அடுத்து புல்லட் இல்லாத துப்பாக்கி போல் வசூல் வலுவிழந்து,அனைவருக்கும் அசல் தேறும் என்கிற நிலைதான். சுமார் 4 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு, சிம்புவுக்கு பொழுதுபோகாத போதெல்லாம் ஷூட் பண்ணப்பட்டு, இறுதியில் 13 கோடி பட்ஜெட்டைத்தொட்ட ‘போடா போடி’ சரியான வியாபாரம் ஆகாமல் அனைத்து ஏரியாக்களையும் ஜெமினியே ரிலீஸ் செய்திருந்தது.
அதே போல் 96 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரான, தங்கரின் ‘அம்மாவின் கைபேசியின் நிலையும் ஏறத்தாழ அதேதான்.
இந்த இரு படங்களின் வசூல் விபரத்தை புரியும்படி சொல்வதாக இருந்தால் ஜெமினி கம்பெனியின் ‘லோகோ’ போடும்போது ரெண்டு குட்டிப்பையன்கள் ஜட்டியோடு நிற்பார்களே அந்த இடத்தில் சிம்புவையும், தங்கர் பச்சானையும் நிறுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.
‘காசிக்குப்பம்’ கலெக்‌ஷனை இன்னும் எண்ணிமுடிக்க முடியவில்லை. ஆதலால் அது குறித்து அடுத்த தீபாவளிக்குப் பார்ப்போம்!

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Blogger இயக்குவது.

More Latest News

Ads 468x60px

Social Icons

Followers

Latest News

Featured Posts