Pages

Menu

19/11/12


‘லிங்குசாமி அளவுக்கு ஒரு பெரிய ஃப்ராடை நான் இதுவரை பார்த்ததில்லை!’- பிரபு சாலமன் பகீர்

துவரை பலமுறை, பல காரணங்கள் சொல்லி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட ‘கும்கி’யின் தள்ளாட்டத்துக்கான ஒரிஜினல் காரணம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
‘கும்கி’ போஸ்ட் புரடக்‌ஷன் நிலையிலிருந்தபோதே, அதை லிங்குவிடமிருந்து ஞானவேல் ராஜா வாங்கியது பழைய கதை.
ஆரம்பத்தில் அது என்னவிலைக்கு கைமாறியது என்பதை அறியாமல் இருந்த பிரபு சாலமனுக்கு, மூன்றாவது நபர் ஒருவர் மூலம் உண்மை தெரியவந்தபோது நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.
காரணம் லிங்கு தந்த பயங்கர கெடுபிடியால் தனக்கு பெரிய சம்பளம் கூட எடுத்துக்கொள்ள முடியாமல் ரூ.5 கோடியில் படத்தை முடித்திருந்தார் சாலமன். ஆனால் படம் கைமாறியதோ 13 கோடிக்கு.
“கஷ்டப்பட்டது நான். ஆனால் நோகாமல் நொங்கு தின்பது லிங்குவா?” என்று கொதித்துப்போன பிரபு சாலமன், தகவல் அறிந்த நிமிடத்திலிருந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, தனக்கு மேற்கொண்டு ஒரு கோடி பணம் கேட்டு சைலண்ட் தர்ணா இருக்க ஆரம்பித்தாராம்.
சில நாட்கள் லிங்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க, இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மத்தியில், ‘என் சினிமா கேரியர்ல, லிங்குவை மாதிரி ஒரு பெரிய ஃப்ராடைப் பார்த்ததில்லை’ என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தாராம்.
இந்த அவதூறு ஐடியா லேசாக ஒர்க்-அவுட் ஆகி கடைசியில் எக்ஸ்ட்ரா 50 லட்சம் தர சம்மதித்தாராம் லிங்கு. ஒரு வழியாக தனக்கும் ஒரு சின்ன பங்கு கிடைத்த நிலையில் தற்காலிகமாக அமைதியாகி விட்டாராம் பங்குத்தந்தை பிரபு சாலமன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக